இந்திய மொழிகளில் விக்கிபீடியா - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, February 16, 2010

இந்திய மொழிகளில் விக்கிபீடியா


உலகின் மிகப் பெரிய ஆன்லைன் என்சைக்ளோபீடியா, இந்தியாவிற்கென தனி பதிப்பு ஒன்றை வெளியிட உள்ளது. இந்தியா மற்றும் சீனாவின் இன்டர்நெட் சந்தை மிக வேகமாக வளர்ந்து வருவதனால், இந்த பதிப்பு தன் உலகளாவிய நிலையை உயர்த்த உதவியாயிருக்கும் என விக்கிபீடியா எண்ணுகிறது.

விக்கிபீடியா ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சீனா, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கென தனி பதிப்பு இருப்பது போல, இந்தியாவிற்கும் தனி பதிப்பு ஒன்றை Wikipedia.in  என்ற முகவரியுடன் அமைக்க இருக்கிறது.

தற்போது இந்தியாவில் விக்கிபீடியாவின் பரவல் அவ்வளவாக இல்லை. இந்தியாவில் அதிகமான எண்ணிக்கையில் ஆங்கிலம் பேச மற்றும் படிக்கத் தெரிந்தவர்கள் இருந்தாலும், இந்தியா குறித்த தகவல்கள் அவ்வளவாக இல்லை என்பதால் இந்நிலை உள்ளது. மேலும் விக்கிபீடியா, இந்திய மொழிகளான தமிழ் (20,979), இந்தி(53,246), மணிப்புரி(24,738), குஜராத்தி(12,627), உருது(12,547), சமஸ்கிருதம் (3,914), பீஹாரி(2,481), பாலி(2,316), பிஜி ஹிந்தி,மராத்தி (26,582) காஷ்மீரி(375), ஒரியா (553) அஸ்ஸாமீஸ்(263), கன்னடம் (7,850), தெலுங்கு(44,345), மேற்கு பஞ்சாபி (2,927), பஞ்சாபி (1,507), சிந்தி (349)மற்றும் வங்காள (21,023) மொழிகளில் பக்கங்களைக் கொண்டிருந்தாலும், இந்த மொழிகளில் கட்டுரைகள் குறைவாகவே உள்ளன. இந்தியாவில் தகவல் அறிவதில் மொழி ஒரு தடையே இல்லை; இருப்பினும் விக்கிபீடியா குறித்த அறிந்தேற்பு மக்களிடம் அவ்வளவாக இல்லை என்பதே இன்றைய நிலையாக உள்ளது.

உலகில் அதிகம் காணப்படும் இணையதளங்களில், விக்கிபீடியா ஆறாவது இடத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒன்பதாவது இடத்தையே கொண்டுள்ளது. எட்டு கோடி பேர் இணைய இந்திய மக்கள் தொகை என்று கண்டறியப்பட்ட இடத்தில், விக்கிபீடியாவினை அணுகுபவர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது வருத்தத்திற்குரியது. இந்நிலையை மாற்ற இந்திய விக்கிபீடியா பிரிவு ஒன்றினை அமைத்து இயங்க விக்கிபீடியா பவுண்டேஷன் முடிவெடுத்துள்ளது.


--------------------------------------நன்றி----------------------------------------


No comments:

Post a Comment