உங்கள் யு-ட்யூப் அக்கவுண்ட் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, March 22, 2010

உங்கள் யு-ட்யூப் அக்கவுண்ட்




கூகுள் தரும் வசதிகள் பலவற்றில் இமெயிலுக்கு அடுத்தபடியாக, பலரின் விருப்பமாக இருப்பது யுட்யூட்தான். இதில் அக்கவுண்ட் வைத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய அல்லது நமக்குப் பிடித்த வீடியோ கிளிப்களை இதில் அப்லோட் செய்து அனைவரும் பார்க்கும் வண்ணம் பதிக்கலாம்.

நீங்கள் யு–ட்யூப் தளம் சென்று தேடிப் பார்த்தால், நாம் டிவி சேனல்களில் பார்க்கும் பல வீடியோ காட்சிகள் பதிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். திறமையான ரசிகர்கள் பலர், பிரபல திரைப்படங்களின் பாடல் காட்சிகளுக்கான பாடல்களில் மாற்றம் செய்து தங்களுக்குப் பிடித்த வகையில் அமைத்து வெளியிட்டிருப்பதனைப் பார்க்கலாம்.

பலர் தங்கள் குழந்தைகளின் வீடியோ கிளிப்களை அனைவரும் காணும் வகையில் அமைத்திருப் பதனையும் காணலாம். இங்கு இந்த யு–ட்யூப் அக்கவுண்ட்டை எப்படிக் கையாளலாம் என்று பார்ப்போம்.
முதலில் கூகுள் ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தாலே, யு–ட்யூப் அக்கவுண்ட் அமைத்துக் கொள்ள முடியும். இவற்றை அமைத்தவுடன் யு–ட்யூப் தளம் சென்று உங்கள் அக்கவுண்ட் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே அக்கவுண்ட் பக்கத்திற்குச் செல்லுங்கள். வலது மேல் மூலையில் உள்ள Account என்பதில் கிளிக் செய்தால், உங்கள் அக்கவுண்ட் பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.

அடுத்து இடது பக்கத்தில் ஒரு பிரிவு 'Overview' எனத் தலைப்பிட்டு இருப்பதனைக் காணலாம். இந்தப் பிரிவின் கீழ் உங்கள் அக்கவுண்ட்டை, வசதிப்படி வைத்துக் கொள்ள பல ஆப்ஷன்கள் கிடைக்கும். முதலில் Profile Setup என்பதில் தொடங்கலாம். இதில் கிளிக் செய்தால் நீங்கள் 'About Me' என்ற ஒரு புதிய பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு உங்கள் யூசர் நேம் அடிப்படையில் ஏதேனும் ஒரு படத்தை அப்லோட் செய்திடலாம். உங்களைப் பற்றி விவரிக்க ஏதேனும் தகவல்களைப் பதியலாம். உங்களுக்கென ஓர் இணைய தளம் இருந்தால், அதனை அங்கே எழுதி வைக்கலாம். கூடுதலாக உங்களின் தனிப்பட்ட தகவல்கள், பிடித்தவை, பிடிக்காதவையும் பதியலாம்.

அடுத்ததாக 'Customize Homepage'. இங்கு நீங்கள் யு–ட்யூப் தளத்தில் நுழைகையில் என்ன என்ன காட்டப்பட வேண்டும் என்பதை வரையறை செய்திடலாம். மூன்றாவது டேப் 'Playback Setup' இங்கு உங்கள் இணைய இணைப்பின் தன்மைக்கேற்ப, நீங்கள் பார்க்கும் யு–ட்யூப் வீடியோக்கள் எந்த தன்மையில் காட்டப்பட வேண்டும் என்பதனை வரையறை செய்திடலாம்.

அடுத்தது 'Email Options' இங்கு உங்களின் ஜிமெயில் முகவரி குறித்து அமைக்கலாம். உங்களின் வேறு ஒரு முகவரியையும் பயன்படுத்தலாம். யு–ட்யூப்பில் இருந்து எத்தனை மெயில்கள், எப்படி அனுப்பலாம் என்பதனை இங்கு செட் செய்திடலாம்.

ஐந்தாவதாக நாம் காண்பது 'Sharing and Privacy' ஆகும். இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதனை நாம் அதிகக் கவனத்துடன் அமைக்க வேண்டும். ஒவ்வொரு மணி நேரத்திலும் பல லட்சக்கணக்கானவர்கள் யு–ட்யூப் தளத்தை நாடுகின்றனர். Search and Contact Restriction என்பதன் கீழ் நீங்கள் அனுமதிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் உங்களுக்கு செய்திகள் அனுப்பவும், உங்கள் வீடியோ கிளிப்களைப் பார்க்கவும் அனுமதிக்கலாம். இதற்கு உங்கள் ஜிமெயில் முகவரி அவர்களிடம் இருக்க வேண்டும். என்பதனை நீங்கள் இயக்கி அமைத்தால், நீங்கள் அண்மையில் பார்த்த யு–ட்யூப் தளங்களை, உங்கள் நண்பர்களும் பார்க்கலாம் Recent Activity என இங்கு தரப்பட்டிருப்பதுவும் அதைப் போன்றதுதான். நீங்கள் அண்மைக் காலத்தில் யு–ட்யூப் தளத்தில் மேற்கொண்ட செயல்பாடுகளை, மற்றவர்கள் பார்க்கக் கூடிய வாய்ப்பைத் தரும்.

அடுத்து நீங்கள் யு–ட்யூப் தளத்தில் ப்ளாக் என்னும் சிறிய வலை மனை அமைப்பதாக இருந்தால் 'Blog Setup.' என்னும் இந்த வசதியினைப் பயன்படுத்தலாம். உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி Add a Blog என்பதில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிளாக் தயாராகிவிடும். ஏழாவதாகக் கிடைக்கும் Mobile Setup என்பதனைக் கிளிக் செய்து, செட் செய்வதன் மூலம், உங்களால் உங்கள் மொபைல் போனிலிருந்து போட்டோக்களை அப்படியே நேராக யு–ட்யூப் தளத்திற்கு அப்லோட் செய்திட முடியும்.

இறுதியாக 'Manage Account' என்ற பிரிவில் உங்கள் அக்கவுண்ட் நிர்வாகத்தை நீங்கள் கவனிக்கலாம். உங்கள் பாஸ்வேர்டை மாற்றலாம்; ஏற்கனவே செட் செய்த தனிப்பட்ட தகவல்களை நீக்கலாம். ஏன், உங்கள் அக்கவுண்ட்டையே குளோஸ் செய்திடலாம். எனவே கவனமாக இதனைக் கையாண்டு உங்கள் தனிப்பட்ட தேடுதல்களில் மற்றவர்கள் தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.



------------------- நன்றி -------------------


வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.

என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com



No comments:

Post a Comment