T.T.கால்குலேட்டர் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, April 2, 2010

T.T.கால்குலேட்டர்



டி.டி.கால்க் (TTCalc.) என அழைக்கப்படும் இந்த கால்குலேட்டரில் சாதாரண, அடிப்படை கணக்குகள் தொடங்கி, ட்ரிக்னாமெட்ரிக்,ஹைபர் போலிக், இன்வெர்ஸ் ஹைப்பர்போலிக், லாஜிக்கல் ஆப்பரேட்டர், லாக்ரிதம் என அனைத்து கணக்கீடுகளையும் தருகிறது. பயன்படுத்துவோர் வரையறை செய்திடும் செயல்பாடுகளையும் மேற்கொள்கிறது. எண்களை பைனரி, ஹெக்ஸா டெசிமல் போன்ற வகைகளிலும் உள்ளீடு செய்து முடிவுகளைப் பெறலாம். சீனம், ஸ்பானிஷ், ரஷ்யன், ஸ்வீடிஷ், பாலிஷ் உள்ளடக்கிய ஏழு மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம். டி.டி.கால்க் ஒரு ஓப்பன் சோர்ஸ் முறையில் உருவான புரோகிராம். எனவே நீங்கள் உங்கள் மொழியில் இதனை இயக்க வேண்டும் என எண்ணினால், அதற்கான பைல்கள் இதன் தளத்தில் தரப்பட்டுள்ளன. அதனை டவுண்லோட் செய்து, முக்கிய சொற்களை மொழி பெயர்த்து இதனை உருவாக்கியவர்களுக்கு அனுப்பலாம்.

இதில் தரப்படும் இன்டர்பேஸ் மிக மிக எளிதானதாக அனைவரும் கையாளும் வகையில் உள்ளது. இந்த கால்குலேட்டரை இலவசமாகப் பெற http://ttcalc.sourceforge.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


------------------- நன்றி -------------------







No comments:

Post a Comment